முலாம்பழம்
முலாம்பழம் பயிர் செய்ய நிலத்தை தயார் செய்தல்:
டிராக்ட்டரில் 5 கலப்பை பயன்படுத்தி நன்கு உழவு செய்ய வேண்டும்.
களைகள் அனைத்தும் காய்ந்த பிறகு, அதாவது 3 முதல் 5 நாட்கள் கழித்து ரோட்டோவேட்டர் மண்ணை தூள் செய்து,
பின்பு,மினி டிராக்டரைப் பயன்படுத்தி பார் அமைத்துக் கொள்ள வேண்டும்.
நன்கு மக்கிய உரம் இடவும், குறிப்பாக மாட்டு சாணம் மற்றும் ஆட்டு சாணம் ஆகியவை பாரில் மட்டும் இடவும்,
களைகள் அதிகமாக விவசாய நிலத்தில் இல்லை என்றால், ரோட்டேட்டரில் மண்ணை தூள் செய்து,
பின்பு மினி டிராக்டர் பயன்படுத்தி பார் அமைத்துக் கொண்டால் போதுமானது.
தொழு உரமிட்டு பாரை தயார் செய்த நிலையில், விவசாய நிலத்தில் போதுமான அளவு சத்து இல்லை என்று நீங்கள் நினைத்தால்
1 ஏக்கருக்கு பாரில் மட்டும் DAP- 20kg megarich – 5kg
Hexaconazole குருணை 4 கிலோ ஆகியவைகளை கலந்து பயன்படுத்தவும் அதன் பிறகு muching சீட் அமைக்கவும்.
தமிழ்நாட்டில் அதிகமாக பயன்படுத்தப்படும் hybrid விதைகள்:
1.Golden glory
2.Kundan
3.NS 710
தர்பூசணி நாற்று விடுதல்:
ஒரு ஏக்கருக்கு 4 (அல்லது) 8 பாக்கெட் பயன்படுத்தவும்
நாற்றுவிடுவதற்கான அட்டை மற்றும் Cocopeat பயன்படுத்தி நாற்று விடவேண்டும்.
இப்போது உள்ள அனைத்து விதைகளும் Hybrid(கலப்பின) விதைகள். ஆகவே, நிலத்தில் நாற்று விடுவது சரியானதல்ல.
ஏனெனில், நாற்று எடுத்து விவசாய நிலத்தில் வைக்கும் போது வேர்ப்பகுதி மற்றும் முளைப்புத்திறன் பாதிப்படையும்.
எனவே, Nursery யில் (அல்லது) Cocopeat பயன்படுத்தி அட்டையில் நாற்று விடுவது சரியானதாகும்.
kelpak-என்ற கடல்பாசி பயன்படுத்தி seed treatment செய்து நாற்று விடவும்.(அல்லது),
12-15 நாட்களில் நாற்றை விவசாய நிலத்தில் வைக்கும் போது kelpak – இல் நனைத்து வைக்கவும், kelpak-என்ற கடல்பாசி பயன்படுத்தி நாற்று விடுவதால்,
நாற்றின் வெள்ளை வேர் வளர்ச்சி அதிகமாகும்…
முலாம்பழம் களை நிர்வாகம்:
இரண்டு mulching sheet -க்கு இடையில், paraquat dichloride 24% SL 1lit-தண்ணீருக்கு 10ml -என்ற அளவில்
மற்றும் Oxyfluorfen 23.5% 1lit-தண்ணீருக்கு 1ml -என்ற அளவில் இரண்டையும் கலந்து பயன்படுத்தவும்.
முலாம்பழம் நீர் நிர்வாகம்:
தினமும் 10 நிமிடம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தண்ணீர் அதிகமாகவோ, குறைவாகவோ விடக்கூடாது. தண்ணீர் அதிகம் ஆனால் தண்டு வெடிப்பு ஏற்படும்.
எனவே, ஈரப்பதம் இருந்தாலே போதுமானது. பிஞ்சு மற்றும் காய்கள் இருக்கும் சமயத்தில் தண்ணீர் சற்று அதிகம் தேவைப்படும்.
புழு மற்றும் பூச்சி தாக்குதல் (Worm and insect infestation):
இலைப்புழு(Leaf minor):
இலைகளின் நடுவில் பாம்பு கோடு போட்டது போல காணப்படும்.
Chemical control:
abacin
No1.
காய்ப்புழு(Fruit border):
முலாம்பழம் காய்களில் துளை போட்டுக்கொண்டு சாப்பிட்டு வரும்.
இவை முலாம்பழம் மகசூலைப் பெரிதும் பாதிக்கும்.இதை காய் சொத்தை என்று அழைப்பார்கள்.
Chemical control:
vayago,
Delegate,
வெள்ளைக்கொசு(White fly):
இவை இலைகளில் உள்ள சாறுகளை உறிஞ்சி விடும்.
இவைகளால் பாதிக்கப்பட்ட இலைகள் புவி ஈர்ப்பு விசைக்கு மாறாக மேல் நோக்கி இருக்கும்.
இவை அதிகமாக பரவ கூடியவை. இவைகளை ஆரம்ப கட்டத்திலேயே கட்டுப்படுத்துவது நல்லது.
இல்லையேல் இவை வைரஸாக மாறிவிடும்.இது முலாம்பழம் செடிகளையே அழித்து விடும்.
வைரஸால் பாதிக்கப்பட்ட செடிகளை மீட்க இயலாது.
Chemical control:
malathion,
Prid,
Bifentherin10%EC.
பழ ஈ (fruitfly):
பழ ஈ, இவை காய் மற்றும் பிஞ்சுகளின் நுணியில் அரிக்க தொடங்கும்,
இதனால் காய்களின் நுணியில் ஓட்டை போன்று தோன்றும்,
இவை முலாம்பழம்-ல் ஏற்படும் மிகப்பெரிய பாதிப்பாகும்,
ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தாமல் விட்டால் மகசூலை பெரிதும் பாதித்து விடும்
Chemical control:
malathion,
meothirin.
பூச்சிகள் மற்றும் இலைப்பேன்(Thrips and mites):
இந்த பூச்சிகளால் பாதிக்கப்பட்ட இலைகள் சாறு உறிஞ்சப்பட்டு புள்ளிகளாகத் தெரியும்.
இவைகளை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துவது நல்லது.
அதிகமாக பாதிக்கப்பட்ட செடிகள் வைரஸாக மாறக்கூடும்.
Chemical control:
flash, exodus,
regent, imida,
actara,
செம்பேன்(Red mites):
இவை சிவப்பு நிறத்தில் இலைகளின் அடிப்பகுதியில் காணப்படும்.
பாதிக்கப்பட்ட இலைகள் வெளிர் நிறமாக மாறிக்கொண்டு வரும்.
Chemical control:
exodus,
Oberon,
Abacin.
முலாம்பழம் பூஞ்சான நோய் மேலாண்மை:(funges Disease):
பழம் அழுகல்( Fruit pot):
பாதிக்கப்பட்ட செடிகளில் உள்ள பழங்கள் அழுகத் தொடங்கும்.
பாதிக்கப்பட்ட பழங்களை கண்டறிந்த உடனே மருந்தை தெளிக்க வேண்டும்
Chemical control:
Kavach,
glo-it.
ஆந்த்ராக்னோஸ்(Antharacnose):
முலாம்பழம் இலைகளில் புள்ளிகளாக இருக்கும்.
இலைப்புள்ளிகள் ஒன்று சேர்ந்து கருகலாக மாறும்.
Chemical control:
Tilt,
Contaf plus,
Folicur.
Early blight:
முலாம்பழம் இலைகள் பழுத்து கருக ஆரம்பிக்கும்.
Late blight:
முலாம்பழம் இலைகள் முழுவதுமாக கருக ஆரம்பிக்கும்.
முலாம்பழம் செடியில் Early blight,Late blight நோய்கள் மட்டுமே அதிகமாக தாக்கும்
Chemical control:
Nativo+Stepto,
Flash super+stepto.
வாடல் மற்றும் ஈரப்பதம்(wilt and damping off):
செடிகள், வேரில் உள்ள பாதிப்புகளால் செடிகள் இறக்க ஆரம்பிக்கும்.
பாதிக்கப்பட்ட செடியில் எந்த வித மாற்றமும் தெரியாது.
பாதிக்கப்பட்ட செடிகளை எடுத்து பார்த்தால் அதில் அழுகல் இருக்கும்.
இந்த பாதிப்பு வேரில் மட்டும் இருந்தால் மருந்தை ட்ரிப்பில் விடலாம்.
Chemical control:
cascade,
redomil Gold,
Coc,
Aliate,
Kocide
நுண்துகள் பூஞ்சை காளான்(Powdery mildew):
முலாம்பழம் இலைகளின் மீது சாம்பல் படிந்து இருப்பது போல இருக்கும்.
Chemical control:
nativo,
Flick super.
முலாம்பழம் உரம் மேலாண்மை:
- முலாம்பழம் கொடி வேர் வளர்ச்சிக்கு kelpak யை பயன்படுத்தவும்,
இவை பயன்படுத்துவதால் வெள்ளை வேர் வளர்ச்சி சற்று அதிகமாக இருக்கும் - முலாம்பழம் கொடிகள் நன்கு வளர kelpak ,3x , restore1 ,
போன்றவைகளை ஒரு ஏக்கருக்கு ஒன்றில் இருந்து இரண்டு லிட்டர் வரை பயன்படுத்தலாம்
13 :40 :13 , 12 :61 :00 போன்றவற்றை ஒரு ஏக்கருக்கு மூன்றில் இருந்து ஐந்து கிலோ வரை பயன்படுத்தலாம் - முலாம்பழம் கொடிகளின் பூக்கள் எண்ணிக்கை அதிகமாக்க
CABplus ,boron ,amino போன்றவற்றை பயன்படுத்தலாம் - முலாம்பழம் கொடிகளில் உள்ள காய்கள் நல்ல எடை வர restore2 ,jk41 , போன்றவற்றை பயன்படுத்தலாம்