தட்டைப்பயிறு பயிர் செய்வது எப்படி ?

cowpea

நிலத்தை தயார்செய்தல்:

தட்டைப்பயிறு நடவு செய்வதற்கு, நன்கு மக்கிய உரம் இடவும், குறிப்பாக மாட்டு சாணம் மற்றும் ஆட்டு சாணம் ஆகியவை ஒரு ஏக்கருக்கு சுமார் 5 முதல் 10 டிராக்டர் உரம் தேவைப்படும்.
அதற்க்கு பிறகு, அதிக புல், கோரைகள் மற்றும் இதர களைகள் அதிகமாக இருந்தால், டிராக்டரில் 5 கலப்பை அல்லது 7 கலப்பையை பயன்படுத்தி நன்கு உழவவேண்டும்.
களைகள் அனைத்தும் காய்ந்த பிறகு, அதாவது 3 முதல் 5 நாட்கள் கழித்து ரொட்டேட்டரில் மண்ணை தூள் செய்து கொள்ளவேண்டும்.
களைகள் அதிகமாக விவசாய நிலத்தில் இல்லை என்றால், ரோட்டேட்டரில் மண்ணை தூள் செய்து கொண்டால் போதுமானது.
தொழு உரமிட்டு நிலத்தை தயார் செய்த நிலையில் விவசாய நிலத்தில் போதுமான அளவு சத்து இல்லை என்று நீங்கள் நினைத்தால்  அதாவது, ரொட்டேட்டரில் மண்ணை தூள் செய்த பிறகு 1 ஏக்கருக்கு DAP- 2 மூட்டை அல்லது super என்று அழைக்கப்படும் SSP – 4 மூட்டை  பயன்படுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் top 3 விதைகளின் பெயர்கள்:

1.

2.

3.

Nursery யில் (அல்லது) உங்கள் வீட்டில் நாற்றுவிடுதல்:

நேரடி விதைப்பு பெரும்பாலும் நடைமுறையில் உள்ளது. தட்டைப்பயிறுகாக வயல் தயார் செய்யப்பட்டு விதைகள் பொதுவாக நேரடியாக உழுத நிலத்தில் வீசப்படும். இருப்பினும், சமீபகாலமாக வழக்கத்திற்கு மாறான வரி விதைப்பு முறையும் நடைமுறையில்  உள்ளது

களை நிர்வாகம்:

Pendimethalin 30 EC  என்னும் களைக்கொல்லியை விதை விதைத்து 0-3 நாட்களுக்கு பிறகு 1000 மில்லி/ஏக்கர் அளவில்  தெளிக்கவும்

நீர் நிர்வாகம்:

3-4 நாட்கள் இடைவெளியில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
அதிகமாகவோ, குறைவாகவோ தண்ணீர் விடக்கூடாது.
ஈரப்பதம் இருந்தாலே போதுமானது.

புழு மற்றும் பூச்சி தாக்குதல்(Worm and insect infestation):

இலைப்புழு(Leaf minor):

இலைகளின் நடுவில் பாம்பு கோடு போட்டது போல காணப்படும்.

Chemical control:

Ekalux,
Coragen

காய்ப்புழு(Fruit border):

தட்டைப்பயிறு காய்களில் துளை போட்டுக்கொண்டு சாப்பிட்டு வரும். இவை தட்டைப்பயிறு மகசூலைப் பெரிதும் பாதிக்கும்.இதை காய் சொத்தை என்று அழைப்பார்கள். பாதிக்கப்பட்ட சொத்தைக் காய்களை செடிகளில் இருந்து அகற்றி விடவேண்டும். சொத்தையால் பாதிக்கப்பட்ட காய்களை செடியில் இருந்து அகற்றாமல் மருந்து தெளித்தால் முழுமையாக கட்டுப்படுத்த இயலாது. எனவே காய்களை பறித்தப் பிறகு மருந்து தெளிப்பது நல்லப் பலனைத் தரும்.

Chemical control:

Delegate,
Tracer

இலைப்புழு(Cater pillar):

தட்டைப்பயிறு செடியின் இலைகளை சாப்பிட்டு வரும்.இது மகசூலை பாதிக்கும்.

Chemical control:

Proclaim,
Coragen,
Delegate

வெள்ளைக்கொசு(White fly):

இவை இலைகளில் உள்ள சாறுகளை உறிஞ்சி விடும். இவைகளால் பாதிக்கப்பட்ட இலைகள் புவி ஈர்ப்பு விசைக்கு மாறாக மேல் நோக்கி இருக்கும். இவை அதிகமாக பரவ கூடியவை. இவைகளை ஆரம்ப கட்டத்திலேயே கட்டுப்படுத்துவது நல்லது. இல்லையேல் இவை வைரஸாக மாறிவிடும்.இது மிளகாய் செடிகளையே அழித்து விடும்.
வைரஸால் பாதிக்கப்பட்ட செடிகளை மீட்க இயலாது.

Chemical control:

Prid,
Bifentherin10%EC

பூச்சிகள்(Thrips):

இந்த பூச்சிகளால் பாதிக்கப்பட்ட இலைகள் சாறு உறிஞ்சப்பட்டு புள்ளிகளாகத் தெரியும். இவைகளை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துவது நல்லது. அதிகமாக பாதிக்கப்பட்ட செடிகள் வைரஸாக மாறக்கூடும்.

Chemical control:

imida,
Thiamethoxam,
Dinoteturan

செம்பேன்(Red mites):

இவை சிவப்பு நிறத்தில் இலைகளின் அடிப்பகுதியில் காணப்படும். பாதிக்கப்பட்ட இலைகள் செந்நிறமாக மாறிக்கொண்டு வரும்.

Chemical control:

Oberon,
Abacin,
interpid

நோய் மேலாண்மை:

பழம் அழுகல்( Fruit pot):

பாதிக்கப்பட்ட செடிகளில் உள்ள பழங்கள் அழுகத் தொடங்கும். பாதிக்கப்பட்ட பழங்களை பறித்து அகற்றி விட்டு மருந்தை தெளிக்கவும்.

Chemical control:

Kavach,
kocide

ஆந்த்ராக்னோஸ்(Antharacnose):

இது இலைகளில் புள்ளிகளாக இருக்கும். இலைப்புள்ளிகள் ஒன்று சேர்ந்து கருகலாக மாறும். இந்த பாதிக்கப்பட்ட காய்கள் நெருப்பில் சுட்டது போல காணப்படும்.

Chemical control:

Tilt,
Contaf plus,
Folicur

Early blight:

இந்த வகை இலைகள் பழுத்து கருக ஆரம்பிக்கும்.

Late blight:

இந்த வகை இலைகள் முழுவதுமாக கருக ஆரம்பிக்கும்.

Chemical control:

Kocide+Stepto,
Flash super+stepto

வாடல் மற்றும் ஈரப்பதம்(wilt and damping off):

செடிகள் , வேரில் உள்ள பாதிப்புகளால் இறக்க ஆரம்பிக்கும். பாதிக்கப்பட்ட செடியில் எந்த வித மாற்றமும் தெரியாது. பாதிக்கப்பட்ட செடிகளை எடுத்து பார்த்தால் அதில் அழுகல் இருக்கும். இந்த பாதிப்பு வேரில் மட்டும் இருந்தால் மருந்தை ட்ரிப்பில் விடலாம். இந்தப் பாதிப்பு தண்டில் இருந்தால் செடியின் தண்டில் இருந்து வேருக்கு செல்லும் படி மருந்தை அனைத்து செடிகளுக்கும் ஊற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட செடிகளை சரி செய்ய இயலாது. ட்ரிப்பில் மருந்தை விடுவதை விட, செடிகளுக்கு மருந்தை ஊற்றுவது நல்லப் பலனைத் தரும்.

Chemical control:

Carbendazim,
redomil Gold,
Coc,
Aliete,
Kocide

நுண்துகள் பூஞ்சை காளான்(Powdery mildew):

இது இலைகளின் மீது சாம்பல் படிந்து இருப்பது போல இருக்கும்.

Chemical control:

Sulpur,
Flick super

தட்டைப்பயிறு உரம் மேலாண்மை:

  • தட்டைப்பயிறு வேர் வளர்ச்சிக்கு kelpak, humic யை பயன்படுத்தவும்,
    இவை பயன்படுத்துவதால் வெள்ளை வேர் வளர்ச்சி சற்று அதிகமாக இருக்கும்
  • தட்டைப்பயிறு நன்கு வளர urea ,20:20:0:13, போன்றவைகளை ஒரு ஏக்கருக்கு ஒன்றில் இருந்து இரண்டு மூட்டை வரை பயன்படுத்தலாம்
    15:15 :15 , 17 :17 :17 போன்றவற்றை ஒரு ஏக்கருக்கு இரண்டு மூட்டை வரை பயன்படுத்தலாம்
  • தட்டைப்பயிறு தூர் எண்ணிக்கை அதிகமாக்க boron, amino போன்றவற்றை பயன்படுத்தலாம்
  • தட்டைப்பயிறு நல்ல எடை வர potash போன்றவற்றை பயன்படுத்தலாம்
Scroll to Top